ADVERTISEMENT

அதிகரிக்கும் கரோனா - காயத்ரி மந்திரத்தை ஆராய மத்திய அரசு நிதி!

10:39 AM Mar 20, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா கரோனாவின் இரண்டாவது அலையை நோக்கி செல்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 40 ஆயிரத்து 953 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகிவுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 188 பேர் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

இதற்கிடையே ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ், காயத்திரி மந்திரமும், பிராணயாமம் என்ற சுவாச பயிற்சியும் கரோனாவை குணமாக்குவதில் உதவுமா என்ற ஆய்வில் ஈடுபடவுள்ளனர். இந்த ஆய்விற்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்துறை நிதியுதவி அளித்துள்ளது. இந்த ஆய்வில் குறைந்த அளவில் கரோனா அறிகுறிகளை கொண்ட இருபது பேர் தேர்தெடுக்கப்பட்டு இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுவர்.

ஒருகுழுவிற்கு வழக்கமான கரோனா சிகிச்சை அளிக்கப்படும். இன்னொரு குழு சிகிச்சை எடுத்துக்கொள்வதோடு, 14 நாட்கள் காயத்திரி மந்திரத்தை ஓதுவார்கள். மூச்சு பயிற்சியிலும் ஈடுபடுவார்கள். இதன்பிறகு இரண்டு குழுக்களும் ஒப்பிடப்பட்டு முடிவு தெரிவிக்கப்படும். இந்த ஆய்விற்காக ஆட்களை சேர்க்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாக எய்ம்ஸ் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT