இந்தியாவில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா கரோனாவின் இரண்டாவது அலையைநோக்கி செல்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்கடந்த 24 மணிநேரத்தில்40 ஆயிரத்து 953 பேருக்கு கரோனாதொற்று உறுதியாகிவுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில்கரோனாவால்பாதிக்கப்பட்ட 188 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ், காயத்திரிமந்திரமும், பிராணயாமம்என்ற சுவாச பயிற்சியும் கரோனாவை குணமாக்குவதில் உதவுமாஎன்ற ஆய்வில் ஈடுபடவுள்ளனர். இந்த ஆய்விற்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்துறைநிதியுதவிஅளித்துள்ளது. இந்த ஆய்வில் குறைந்த அளவில் கரோனாஅறிகுறிகளைகொண்ட இருபது பேர் தேர்தெடுக்கப்பட்டுஇரண்டு குழுக்களாக பிரிக்கப்படுவர்.
ஒருகுழுவிற்குவழக்கமான கரோனாசிகிச்சை அளிக்கப்படும். இன்னொரு குழு சிகிச்சை எடுத்துக்கொள்வதோடு, 14 நாட்கள் காயத்திரி மந்திரத்தை ஓதுவார்கள். மூச்சு பயிற்சியிலும்ஈடுபடுவார்கள். இதன்பிறகு இரண்டு குழுக்களும் ஒப்பிடப்பட்டு முடிவு தெரிவிக்கப்படும். இந்த ஆய்விற்காக ஆட்களை சேர்க்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகஎய்ம்ஸ் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.