பாரத ரத்னா மற்றும் பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னோ பின்னோ சேர்த்தால் வழங்கப்பட்ட விருதுகள் பறிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் விருதுகளை தவறாகப் பயன்படுத்துவதாக அறிந்தாலும் விருது திரும்ப பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் கூறும்போது, 'குடிமக்களில் சிறப்பான சேவை செய்தவர்களுக்கு வழங்கப்படும் பாரத ரத்னா, பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் போன்ற தேசிய விருதுகளை பெறுபவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டம் 18(1)பிரிவின்படி, அந்த விருதை தங்களின் பெயருக்கு முன்னும், பின்னும் பயன்படுத்தக் கூடாது. இதனையும் மீறி விருது பெற்றவர் அதனை தவறாகப் பயன்படுத்தினால் குடியரசு தலைவர் அதனை திரும்ப பெரும் அதிகாரமும் உள்ளது' என கூறினார்.
பெயருக்கு பின் பட்டம் போட்டால் விருது பறிக்கப்படும்; மத்திய அரசு அதிரடி அறிவிப்பு...
Advertisment