மீண்டும் அதிகரிக்கும் கரோனா: 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் 

central goverment writes letter to 5 states on Corona surge

இந்தியாவில் கடந்த இரு மாதங்களாக கட்டுக்குள் இருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரண்டாயிரத்திற்கும் கீழாக பதிவாகி வந்த தினசரி கரோனா பாதிப்பு, தற்போது இரண்டாயிரத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா பரவலின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது.

இந்த நிலையில், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா , மிசோரம் ஆகிய 5 மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில் கரோனா பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பரிசோதனையை அதிகரித்தல், தடுப்பூசி செலுத்தும் பணிகளைத்தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்
Subscribe