Central budget tabled today

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (31-01-25) காலை தொடங்கியது. அதனை தொடர்ந்து, இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதற்காக நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01-02-25) மத்திய அரசின் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் 3 நாட்கள் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி 9 அமர்வுகளாக பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், 2வது பகுதி மார்ச் 10 முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 8வது முறையாக தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.