Cell phone explodes and the girl dies

Advertisment

மொபைல் போன் வெடித்துச் சிதறி சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ளது பழையனூர் பகுதி. இந்த பகுதியைச் சேர்ந்த சிறுமி எட்டு வயது ஆதித்யஸ்ரீ. பள்ளி மாணவியான ஆதித்யஸ்ரீ மொபைல் போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென மொபைல் போனானது வெடித்துச் சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்த மாணவி ஆதித்யஸ்ரீ உயிரிழந்தார்.

சத்தம் கேட்டு உடனடியாக அங்கு வந்த சிறுமியின் பெற்றோர்கள் அவரின் உடலைப் பார்த்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தகவலறிந்து சம்பவத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் செல்போனானது சார்ஜ் போடப்பட்ட நிலையிலிருந்தது தெரிய வந்தது. செல்போன் வெடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.