Advertisment

"குறைந்தபட்சம் இந்த வருடம் மட்டுமாவது" - பண்டிகை காலம் வேண்டுகோள் விடுத்த மத்திய அரசு!

health sec - icmr

இந்தியாவில் தினசரி கரோனாபாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷனும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்தலைமை இயக்குனர்டாக்டர் பல்ராம் பார்கவாவும்இன்று செய்தியாளர்களைச் சந்தித்து கரோனாநிலவரம் குறித்து பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தனர். மேலும் பண்டிகை காலம் நெருங்குவதையொட்டி அதுதொடர்பாக மக்களுக்கு வேண்டுகோளும்விடுத்தனர்.

Advertisment

செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசியமத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன்கூறியதாவது;

Advertisment

கேரளாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் நாட்டின் மொத்த பாதிப்பில் கணிசமான எண்ணிக்கையைக் கேரளா அளித்து வருகிறது. நாடு முழுவதும் கரோனாசிகிச்சையில் உள்ளவர்களின்எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்தியாவில் 18 மாவட்டங்களில் வாராந்திர கரோனாஉறுதியாகும் சதவீதம் 5% முதல் 10% வரை பதிவாகி வருகிறது. கேரளாவில் 1,44,000 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இது நாட்டில் மொத்தமாக கரோனாசிகிச்சையில் உள்ளவர்களின்எண்ணிக்கையில் 52% ஆகும். மகாராஷ்டிராவில் 40,000 பேரும், தமிழ்நாட்டில் 17,000 பேரும், மிசோரத்தில் 16,800 பேரும், கர்நாடகாவில் 12,000 பேரும் சிகிச்சையைஉள்ளனர்.

பண்டிகைகள் நெருங்குவதால், கூட்டத்தைத்தவிர்க்கவும், தனிமனித இடைவெளியை பின்பற்றவும், முகக்கவசத்தைப் பயன்படுத்தவும் நாங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். கரோனாபாதுகாப்பு நடத்தையை பின்பற்றி பண்டிகைகளைக் கொண்டாடுங்கள்.

இவ்வாறுமத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன்தெரிவித்தார்

அதேபோல் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசியடாக்டர் பல்ராம் பார்கவா, "குறைந்தபட்சம் இந்த வருடம் மட்டுமாவது அத்தியாவசிய பயணங்களைத்தவிர்த்து பண்டிகையைக் கொண்டாடுவது விவேகமானதாகஇருக்கும். கோவக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கத்தேவையான அனைத்துதரவுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் தரவுகளை ஆராய்ந்து வருகிறது. முடிவை அதுதான்எடுக்கவேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாகத்தடுப்பூசி செலுத்துவதே தற்போதைய தேவை. பூஸ்டர் ஷாட்கள் குறித்தபேச்சுக்கள் தற்போது பொருத்தமற்றவை" எனத்தெரிவித்தார்.

Kerala ICMR union health ministry
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe