Skip to main content

"குறைந்தபட்சம் இந்த வருடம் மட்டுமாவது" - பண்டிகை காலம் வேண்டுகோள் விடுத்த மத்திய அரசு!

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

health sec - icmr

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷனும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவாவும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து கரோனா நிலவரம் குறித்து பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தனர். மேலும் பண்டிகை காலம் நெருங்குவதையொட்டி அதுதொடர்பாக மக்களுக்கு வேண்டுகோளும் விடுத்தனர்.

 

செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய  மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியதாவது; 

 

கேரளாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் நாட்டின் மொத்த பாதிப்பில் கணிசமான எண்ணிக்கையைக் கேரளா அளித்து வருகிறது. நாடு முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.  

 


இந்தியாவில் 18 மாவட்டங்களில் வாராந்திர கரோனா உறுதியாகும் சதவீதம் 5% முதல் 10% வரை பதிவாகி வருகிறது. கேரளாவில் 1,44,000 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இது நாட்டில் மொத்தமாக கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் 52% ஆகும். மகாராஷ்டிராவில் 40,000 பேரும், தமிழ்நாட்டில் 17,000 பேரும், மிசோரத்தில் 16,800 பேரும், கர்நாடகாவில் 12,000 பேரும் சிகிச்சையை உள்ளனர்.

 

பண்டிகைகள் நெருங்குவதால், கூட்டத்தைத் தவிர்க்கவும், தனிமனித இடைவெளியை பின்பற்றவும், முகக்கவசத்தைப் பயன்படுத்தவும் நாங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். கரோனா பாதுகாப்பு நடத்தையை பின்பற்றி பண்டிகைகளைக் கொண்டாடுங்கள்.

இவ்வாறு   மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன்  தெரிவித்தார்

 

 
அதேபோல் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய  டாக்டர் பல்ராம் பார்கவா, "குறைந்தபட்சம் இந்த வருடம் மட்டுமாவது அத்தியாவசிய பயணங்களைத் தவிர்த்து பண்டிகையைக் கொண்டாடுவது விவேகமானதாக இருக்கும். கோவக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கத் தேவையான அனைத்து தரவுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் தரவுகளை ஆராய்ந்து வருகிறது. முடிவை அதுதான் எடுக்கவேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி செலுத்துவதே தற்போதைய தேவை. பூஸ்டர் ஷாட்கள் குறித்த பேச்சுக்கள் தற்போது பொருத்தமற்றவை" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்