Skip to main content

கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளை மாற்றி செலுத்தலாமா? - ஆய்வுக்கு அனுமதி வழங்க நிபுணர் குழு பரிந்துரை!

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

covaxin and covishield

 

கரோனாவிற்கெதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசியைக் கண்டுபிடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளன. இவ்வாறு பயன்பாட்டில் உள்ள கரோனா தடுப்பூசிகளில் பெரும்பான்மையானவை இரண்டு டோஸ்களைக் கொண்டுள்ளது. மக்களுக்கு எந்த தடுப்பூசி முதல் டோஸாக செலுத்தப்படுகிறதோ, அதே தடுப்பூசிதான் இரண்டாவது டோஸாகவும் செலுத்தப்பட்டுவருகிறது.

 

இதற்கிடையே முதல் டோஸாக ஒரு தடுப்பூசியையும், இரண்டாவது டோஸாக வேறொரு தடுப்பூசியையும் செலுத்திக்கொள்வது குறித்து வெளிநாடுகளில் சில ஆய்வுகள் நடந்துள்ளன. அதில் இரண்டு தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக்கொள்வது ஆபத்தானது அல்ல என்றே இதுவரை முடிவுகள் வந்துள்ளன. இந்நிலையில், இந்தியாவில் முழுமையான பயன்பாட்டில் உள்ள கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக்கொள்வது குறித்த ஆய்விற்கு அனுமதியளிக்க மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

 

கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக்கொள்வது குறித்த ஆய்வினை நடத்த, வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்க நிபுணர் குழு பரிந்துரைத்திருப்பதாகவும், அனுமதி வழங்கப்பட்டவுடன் 300 ஆரோக்கியமான தன்னார்வலர்கள் மீது இந்த சோதனை நடத்தப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும், 5 - 17 வயதான குழந்தைகள் மீது தங்களது தடுப்பூசியை சோதனை செய்ய அனுமதி கோரிய பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தின் விண்ணப்பத்தைப் பரிசீலித்த  மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு, முதலில் அத்தடுப்பூசியைக் கொண்டு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட சோதனையின் இரண்டாவது பகுதி தரவுகளை சமர்ப்பிக்க பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தை அறிவுறுத்தியுள்ளது என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; மீண்டும் தொடங்கிய தடுப்பூசி உற்பத்தி!

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

covid infection increased again started covershield vaccination 

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள் கொரோனாவை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிட்ஷீல்டை உற்பத்தி செய்து வந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசி உற்பத்தி செய்வதை நிறுத்தியது.

 

தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சீரம் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 


 

Next Story

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் சென்னையை அடைந்தது! 

Published on 02/05/2022 | Edited on 02/05/2022

 

 

The heart of the brain dead youth reached Chennai!

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 21 வயது இளைஞரின் இதயம் வேலூரில் இருந்து சென்னைக்கு ஒன்றரை மணி நேரத்தில் எடுத்து வரப்பட்டது. 

 

வெறும் 90 நிமிடங்களில் 150 கி.மீ. தூரம் பயணித்து வேலூரில் இருந்து சென்னை வந்து சேர்ந்துள்ளது ஓர் இதயம். அந்த இதயத்தின் பாதுகாப்பான பயணத்திற்கு வழிநெடுகிலும் இடையூறு இல்லாதப் பாதையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது காவல்துறை. அந்த இதயம் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே  வசித்து வரும் 21 வயதான தினகரனின் இதயம். 

 

கடந்த வெள்ளிக்கிழமை அன்று கூலி வேலை முடித்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது, விபத்தில் சிக்கியுள்ளார் தினகரன். வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தினகரன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அன்று மூளைச்சாவு அடைந்தார். இவ்வுலக வாழ்க்கையை தங்களது மகன் தொடர முடியாது என்பதை அறிந்து துடித்தது பெற்றோரின் இதயம். 

The heart of the brain dead youth reached Chennai!

அதேநேரம், பிறர் வாழ உதவும் வகையில், கல்லீரல், இதயம், சிறுநீரகம் ஆகிய உடலுறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனர் அந்த பெற்றோர். கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கே தானமாக வழங்கப்பட்டது. இதயத்தை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. வேலூர் முதல் சென்னை வரை 150 கி.மீ. தூரத்தில் மிகக் குறைந்த நேரத்தில் கடக்க வேண்டுமென திட்டமிடப்பட்டு, காவல்துறையிடம் உதவிக் கோரப்பட்டது. இதற்காக, அவர்கள் 'கிரீன் காரிடார்' திட்டத்தைச் செயல்படுத்த  திட்டமிட்டனர். மற்றொரு புறம், தினகரன் உடலில் இருந்து இதயம் முறையாகப் பிரித்தெடுக்கப்பட்டது. ஐ.சி.யூ. வகை ஆம்புலன்ஸ் மூலம் பிற்பகல் 03.00 மணிக்கு வேலூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது தினகரனின் இதயம். 

 

வேல்முருகன் என்பவர் ஓட்டிய அந்த ஆம்புலன்ஸில் மருத்துவர்களும், பாராமெடிக்கல் ஊழியர்களும், இரண்டு டெக்னீசியங்களும் இருந்தன. வழி நெடுகிலும் 'கிரீன் காரிடார்' செயல்திட்டம் மூலம் காவல்துறையினர் போக்குவரத்தை நிறுத்தி ஆம்புலன்ஸுக்கு இடையூறு இல்லாத வழியை அமைத்துக் கொடுத்தனர். 

 

தினகரனின் இதயத்தை தாங்கிப் பயணித்த ஆம்புலன்ஸ், சரியாக ஒன்றரை மணி நேரத்தில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையை அடைந்தது.