ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் சாக்கடைக் குழியில் விழுந்த பெண் மற்றும் குழந்தையை பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.
ஜவகர் காலனியில் சாக்கடைக் குழி திறந்திருப்பதையடுத்து, அதன் அருகே எச்சரிக்கை வாசகம் அடங்கிய பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அப்பகுதியில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்த பெண் எதிர்பாராத விதமாக சாக்கடைக் குழிக்குள் விழுந்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக ஒன்றுகூடி, சாக்கடைக் குழிக்குள் ஒருவரை இறக்கினர். பின்னர், அந்த நபர் பெண் மற்றும் குழந்தையைப் பத்திரமாக மீட்டார். இதுகுறித்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.