Children attacked by dogs... Condemnation caused by the woman's action!

அண்மைக்காலமாகவே தெருநாய்களால் சிறுவர்கள் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

இந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு அறைகிணறு பகுதியில் சிறுவனைத் தெருநாய் ஒன்று கடித்து குதறும் பதறவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளியான அந்த வைரல் வீடியோவில், சைக்கிளில் வெளியே வந்த சிறுவன் நூராசை தெருநாய் ஒன்று கடித்துக் குதறுகிறது. தொடர்ந்து நாயிடம் இருந்து சிறுவன் தப்பிக்க முயன்றும் விடாமல் நாய் துரத்தித் துரத்தி கடிக்கிறது. அருகிலிருந்த மற்ற சிறுவர்கள் உள்ளே சென்று பெரியவர்களை அழைத்து வந்த நிலையில் நாய் சிறுவனை விட்டுவிட்டு ஓடியது. இதே தெருநாய் ஒரே நாளில் இதுபோன்று நான்குபேரைக் கடித்துக் குதறியதாகவும், அதில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அச்சத்தில் உறைந்துள்ளது கோழிக்கோடு அறைகிணறு பகுதி.

Advertisment

Children attacked by dogs... Condemnation caused by the woman's action!

இதேபோல் சமூக வலைத்தளங்களில் வெளியான மற்றொரு வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு கண்டனத்தையும் பெற்று வருகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் நிகழ்ந்துள்ளது இந்த சம்பவம். லிப்ட் ஒன்றில் பெண் ஒருவர் வளர்ப்பு நாயுடன் சென்றுள்ளார். அந்த லிப்டில் சிறுவன் ஒருவனும் சென்றுள்ளான். தனக்கான தளம் வந்த உடன் சிறுவன் வெளிய செல்ல முயன்றபொழுது சிறுவனை அப்பெண் கையில் பிடித்திருந்த வளர்ப்பு நாய் கடித்தது. சிறுவன் அலறியடித்து வலியால் துடித்த நிலையில் வளர்ப்பு நாயை கொண்டுவந்த பெண் எந்த ஒரு ரியாக்ஷனும் கொடுக்காமல் சாதாரணமாக நிற்கும் சிசிடிவி காட்சி வெளியாகி கண்டனத்தைப் பெற்று வருகிறது. மேலும் அச்சிறுவனின் தந்தை குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில் அந்த பெண்ணின் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/icSj3TDOvg4.jpg?itok=x1nFMQS8","video_url":" Video (Responsive, autoplaying)."]}

Advertisment