cbse

'உருமாறிய கரோனா'பரவல்காரணமாக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில்,தற்பொழுது மத்திய கல்வித்துறை அமைச்சர்ரமேஷ்பொக்கிரியால் சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு தேதியை அறிவித்துள்ளார்.

Advertisment

தற்பொழுது அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில், "அடுத்த வருடம் மே4-ஆம் தேதிசி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கானபொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளது. மே 4-ஆம் தேதி தொடங்கி, ஜூன்10 ஆம் தேதிவரை தேர்வுகள் நடைபெறும்.செய்முறைத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெறும். ஏற்கனவே சொன்னதுபோல், 30 சதவிகித பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதல் பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது.கரோனாதடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்துசி.பி.எஸ்.இ தேர்வுகள் நடைபெறும். ஜூலை 15-ஆம் தேதிக்குள்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்" எனத்தெரிவித்துள்ளார்.

Advertisment