சிபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்த திருவனந்தபுரம்!!

சிபிஎஸ்சி பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் இன்றுவெளியானது. இந்த ஆண்டுதேர்ச்சி விகிதம் 83.01 சதவிகிதம் என சிபிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த வருடம் சிபிஎஸ்சிதேர்ச்சி விகிதத்தில், திருவனந்தபுரம் 97.32% தேர்ச்சியடைந்துமுதலிடத்திலும்.இரண்டாம் இடத்தில் 93.87 சதவிகிதம் தேர்ச்சி பெற்று சென்னையும்.முன்றாம் இடத்தில் 89 சதவிகிதம் தேர்ச்சிபெற்றுடெல்லியும் இடம்பிடித்துள்ளது.

CBSE

அதேபோல் இந்த வருடமும் பெண்கள்ஆண் தேர்வர்களை விட 9.32 சதவிகிதம் அதிகம்தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட ஒரு சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஒன்பது பேர் முதலிடம் பிடித்துள்ளனர் முதல் மதிப்பெண் 499, இரண்டாம் மதிப்பெண் 498 என சிபிஎஸ்சியின் மக்கள் தொடர்பு அலுவலர் ராமா ஷர்மா கூறியுள்ளார்.

அதேபோல் தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்களுக்கு பதட்டம் அல்லது அடுத்தகட்டமுடிவுகள் கையாளுவதில் ஏற்படும் சிரமங்களை நீக்க மாணவர்கள்சிறப்பு ஆலோசனை பெற 1800-11-8004 என்ற இலவச சேவை எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம். இந்த சேவையை நாட்டின் எப்பகுதியிலிருந்தும் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

+2 exams cbsc results
இதையும் படியுங்கள்
Subscribe