
கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 வரை 6,759 தேர்வு மையங்களில் நடந்த சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகளை 16.6 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்நிலையில் இன்றுமுடிவுகள் வெளியாகியுள்ளது. வெளியான முடிவுகள் அடிப்படையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 87.33 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 5.38 சதவீதம் குறைந்துள்ளது.
இன்று வெளியான தேர்வு முடிவுகளில் திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91 சதவீதமும், பெங்களூருவில் 98.64 சதவீதமும்சென்னை மண்டலத்தில் 97.40 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 1.06 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)