ADVERTISEMENT

10,12 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் குறித்து மத்திய அரசு தகவல்..

03:02 PM Jun 25, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. கல்வி வாரியங்கள் ரத்து செய்வதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலால் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு மாநில அரசுகளும் மாநில கல்வி வாரியத்தின் கீழ் வரும் பள்ளிகளில் பொதுத் தேர்வுகளை ரத்து செய்து வருகிறது. இந்தச் சூழலில், சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் 10 மாற்று 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் குறித்துத் தெளிவான அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமலிருந்தது. இந்நிலையில், இதுகுறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஜூலை 1 முதல் 15 வரை திட்டமிடப்பட்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்ய சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தேர்வெழுத விருப்பம் தெரிவிக்கும் மாணவர்களுக்கு, தற்போதைய சூழல் சீரடைந்தவுடன் தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார். அதேபோல, ஐ.சி.எஸ்.இ. பொதுத்தேர்வுகளையும் ரத்து செய்ய ஐ.சி.எஸ்.இ. நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT