உலகத்தை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12ஆம் சிபிஎஸ்இ வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஜூலை 1 முதல் 15 ம் தேதி வரை நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.