Advertisment

சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

சி.பி.எஸ்.இ. (Central Board Of Secondary Education- CBSE) 10 மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

Advertisment

"10 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு மே மாதம் 4- ஆம் தேதி தொடங்கி ஜூன் 7- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 10 ஆம் வகுப்புக்கு காலை 10.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 4- ஆம் தேதி தொடங்கி ஜூன் 11- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12 ஆம் வகுப்புக்கு காலை 10.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரையும், மதியம் 02.30 மணி முதல் மாலை 05.30 மணி வரையும் இரு வேளைகளில் தேர்வுநடைபெறுகிறது. பொதுத்தேர்வுகளை மாணவர்கள் அச்சமின்றியும், பதற்றமின்றியும் எதிர்கொள்ள வேண்டும். பொதுத்தேர்வுகளை நடத்தத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார்" என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisment

Board exam cbse SCHEDULE Tweets Union Minister
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe