supreme court

நேற்று காவல்துறை ஆணையரிடம் சாரதா நிதி மோசடி குறித்து விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகளை மேற்குவங்க காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதை அடுத்து, கொல்கத்தாவிலுள்ள காவல் ஆணையர் இல்லத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ‘ஜனநாயகத்தை காப்போம்’ எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனால் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில், சிபிஐ இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடி மனு தாக்கல் செய்தது. சிபிஐ இன்றே இதற்கு விசாரணை வேண்டும் என்று மனு தாக்கல் செய்தது ஆனால் உச்சநீதிமன்றம் அதை மறுத்து நாளை விசாரணை எடுத்துக்கொள்ளப்படும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம் ராஜீவ் குமாருக்கு எதிரான ஆதாராங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Advertisment