ஹரியானா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா வீட்டில் சிபிஐ இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு அவர் முதல்வராக இருந்தபோது முறைகேடான வகையில் 1400 ஏக்கர் நிலம் குடிருப்புகள் கட்ட ஒதுக்கப்பட்டதாகவும், அதில் ஊழல் நடைபெற்றதாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. தற்போது இந்த விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த சோதனை நடத்தப்படுவதாக சிபிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை...
Advertisment