கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் ஆகியோருக்கு சொந்தமான 15க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சிபிஐ சோதனையில் ரூ.50 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் சொத்து குவிப்பு தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக டி.கே.சிவகுமார் மற்றும் அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் ஆகியோருக்கு சொந்தமான 15க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று சிபிஐ அதிரடி சோதனையில் ஈடுபட்டது. கர்நாடகாவில் ஒன்பது இடங்களிலும், டெல்லியில் நான்கு இடங்களிலும், மும்பையில் ஒரு இடத்திலும் என மொத்தம் 14 இடங்களில் இன்று சோதனை நடத்தப்பட்டது. இதில் சுமார் ரூ. 50 லட்சம் பணத்தை சிபிஐ பறிமுதல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.