கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு சமீபத்தில் கவிழ்ந்தது. அதனையடுத்து எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சியமைத்தது.

Advertisment

cbi probe in karnataka telephone spying controversy

இந்த நிலையில் குமாரசாமி முதல்வராக இருந்தபோது அரசியல் கட்சித் தலைவர்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டு, அதனை பதிவு செய்யகாவல்துறைக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்திருந்ததாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டுமின்றி கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுடைய தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisment

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வரான எடியூரப்பா இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேசமயம், தனக்கு எதிராக தவறான செய்திகள் பரப்பப்படுவதாகவும், எந்தவொரு விசாரணையையும் துணிச்சலுடன் சந்திக்க தாம் தயாராக இருப்பதாகவும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.