Advertisment

மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ காவல் - நீதிமன்றம் அனுமதி

 CBI Police-Court Permission for Delhi Deputy Chief Minister

அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.

Advertisment

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான விசாரணைக்காக கடந்த 22 ஆம் தேதி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அன்று முற்பகலில் விசாரணைக்கு ஆஜரான நிலையில் 8 மணி நேர விசாரணைக்குப் பின்னர் அவரை சிபிஐ போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் டெல்லி துணை முதல்வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கேட்டு இருந்தது. இதையடுத்துமணீஷ் சிசோடியாவை மார்ச் 4ம் தேதி வரை சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Advertisment

CBI Delhi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe