ப.சிதம்பரம் வீட்டில் சுவரேறி குதித்த சிபிஐ அதிகாரிகள்!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்தன் மீது எந்தவித குற்றச்சாட்டும் இல்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில்செய்தியாளர்களைசந்தித்து விளக்கம் அளித்த நிலையில், அவர் டெல்லியில் உள்ளஅவரது வீட்டிற்கு சென்றார்.

 CBI officers jumping into the house of P Chidambaram

இந்நிலையில்அவரை பின்தொடர்ந்து சென்ற சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் உள்ள சிதம்பரத்தின் வீட்டிற்கு விசாரணை நடத்த சென்றனர். வீட்டுக்கதவு பூட்டப்பட்டதால்வீட்டின்காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து அதிகாரிகள்உள்ளே சென்றுள்ளனர்.

கதவை தட்டியும் திறக்காததால் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி குதித்துஉள்ளே சென்றுள்ளனர். தற்போது விசாரணைக்கு சென்றுள்ள அதிகாரிகள் ப.சிதம்பரத்தின் வீட்டின் தரை தளத்தில் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதேபோல் வீட்டுக்குள்ப.சிதம்பரத்துடன் முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் அபிஷேக் சிங்வி, சல்மான் குர்ஷித், கபில் சிபல்ஆகியோர் உள்ளனர்.

CHITHAMPARAM congress
இதையும் படியுங்கள்
Subscribe