Advertisment

சி.பி.ஐ. அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்! 

CBI Karthi Chidambaram to appear in office

சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று (26/05/2022) ஆஜரானார் கார்த்தி சிதம்பரம்.

ரூபாய் 50 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய குற்றச்சாட்டில், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே அதிரடியாக சோதனை நடத்தியிருந்தனர். அதைத் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரின் ஆடிட்டர் பாஸ்கரராமன் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இதில், ஆடிட்டர் பாஸ்கரராமனை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

Advertisment

இந்நிலையில், டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகங்கை தொகுதியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜரானார். அவரிடம் துருவித்துருவிசி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் .

Advertisment

congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe