ADVERTISEMENT

சிபிஐ காவலில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர்!

05:17 PM May 19, 2022 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விசா மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு நான்கு நாட்கள் சிபிஐ காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் நிறுவனங்களில் செவ்வாய்க்கிழமை அன்று சிபிஐ போலீசார் 5 மணிநேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். சென்னை மற்றும் மும்பையில் தலா மூன்று இடங்களிலும், கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடங்களிலும் என மொத்தம் 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை சீனாவைச் சேர்ந்தவர்கள் இந்தியா வருவதற்கு சட்டவிரோதமாக 260 விசாக்கள் கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனம் மூலம் தரப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. வேதாந்தா குழுமத்திற்குச் சொந்தமான மின் நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக அவர்களுக்கு இந்த விசாக்கள் வழங்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விசாக்களை வழங்குவதற்காக லட்சக்கணக்கில் பணம் பெறப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

50 லட்சம் பெற்றுக்கொண்டு விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரத்தின் மீது இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ, செவ்வாய்க்கிழமை அன்று ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் சிபிஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட சூழலில், இவ்வழக்கில் ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணைக்கு அவர் சரியான ஒத்துழைப்பு தரவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT