car

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, இணை இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மோதலில் அதிரடி திருப்பமாக நேற்று முன்தினம் இரவோடு இரவாக அவர்கள் நீக்கப்பட்டனர். அவர்களது அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.

Advertisment

கட்டாய விடுப்பில் சென்றுள்ள சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவின் வீட்டை நோட்டமிட்ட நான்கு பேரை கைது டெல்லி போலிஸார் செய்துள்ளனர். இன்று காலை நான்கு மணி அளவில் அலோக் வர்மாவின் வீட்டின் சுற்றுபுற சுவர் அருகில் நான்கு பேர் பதுங்கியுள்ளனர். அவர்களை கண்ட அலோக் வர்மாவின் வீட்டுக் காவலர் அவர்களை பிடித்து வைத்திருந்தார். பின்னர், டெல்லி போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விசாரணைக்காக காவல் நிலயத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

Advertisment

கைது செய்யப்பட்ட நான்கு பேரும், சிபிஐ தலைவர் பரிந்துறையில் அலோக் வர்மாவின் வீட்டை புலனாய்வு செய்ய அனுப்பப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.