Advertisment

கொடுத்த நீரை காக்க முடியாத தமிழகம்.. அதிர்ச்சி தரும் வீணான காவிரி நீரின் அளவு...

சமீபத்தில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழக மற்றும் கர்நாடக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்குரிய 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டில் மட்டும் 130 டிஎம்சி காவிரி நீரை தமிழகம் கடலில் கலக்கவிட்டிருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

Advertisment

cauvery water wasted by tamilnadu government

காவிரியை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் வறட்சியில் தவித்து வரும் நிலையில் இந்த செய்தி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு மே 27ஆம் தேதி வரை காவிரியில் தமிழகத்துக்கு 405 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் மட்டும் 130 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேட்டூருக்கு அடுத்து தமிழகத்தில் நீரை தேக்கி வைக்க எந்த அணையும் இல்லாததால் இவ்வளவு நீர் வீணானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திடம் நீர் இல்லை என கர்நாடகாவிடம் போராடிக்கொண்டிருக்கும் போது கர்நாடகம் கொடுத்த நீரில் மூன்றில் ஒரு பங்கை கடலில் கலக்கவிட்டு தவித்து வருகிறது தமிழகம்.

karnataka cauvery
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe