கர்நாடகாமாநிலகபினியாற்றில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்யும் என்பதால், கபினி ஆற்றில் இருந்து காவிரிக்கு அதிக அளவு நீர் திறக்கப்படலாம். இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனை தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடுத்த 24 மணி நேரத்திற்கு 5 டிஎம்சி முதல் 6 டிஎம்சி வரை இருக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கையை அனுப்பியது.