Skip to main content

காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு- மத்திய அரசு எச்சரிக்கை!

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

கர்நாடகா மாநில கபினியாற்றில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்யும் என்பதால், கபினி ஆற்றில் இருந்து காவிரிக்கு அதிக அளவு நீர் திறக்கப்படலாம். இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

CAUVERY WATER MAY BE INCREASE FLOODED CHANCE UNION JAL SAKTHI NOTIFICATION ISSUE

 

அதனை தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடுத்த 24 மணி நேரத்திற்கு 5 டிஎம்சி முதல் 6 டிஎம்சி வரை இருக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கையை அனுப்பியது. 





 

சார்ந்த செய்திகள்

Next Story

'கர்நாடகாவில் நீர் இல்ல... காங்கிரஸ் பாஜகவுக்கு இங்க ஓட்டு இல்ல..'-தஞ்சையில் சீமான் பரப்புரை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'No water in Karnataka... No vote for Congress'-Seeman lobbying in Thanjavur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஹிமாயூன் கபீரை ஆதரித்து தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்பொழுது பேசிய அவர், ''இங்கு வாக்குகேட்டு வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, பாஜகவின் தலைவர்களின் கருத்து என்னவாக இருக்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது எனச் சொல்லும் கட்சிக்கு ஓட்டு கேட்டவர் முதல்வர் ஸ்டாலின். மானமிக்க, மண்ணை நேசிக்கக்கூடிய தலைவனாக இருந்தால் தண்ணி தரவில்லை, உங்களுக்கு எதற்கு ஓட்டு? கூட்டணியும் இல்லை, சீட்டு இல்லை என்று முடிவு எடுத்திருக்க வேண்டுமா வேண்டாமா? ஆனால் காங்கிரசுக்கு 10 சீட்டு கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் நாம் என்ன முடிவெடுக்க வேண்டும் என்றால் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்றால் ஒரு தமிழரின் ஓட்டும் உனக்கு இல்லை. என்ற முடிவை நாம் எடுக்க வேண்டும். அப்படி தோற்கடித்தால்தான், ஏன் நம்மை தோற்கடித்தார்கள் என அவர்கள் சிந்திப்பார்கள். காவிரியில் மக்களுக்கான நீரை பெற்றுக் கொடுக்க முடியவில்லை; கச்சத்தீவை எடுத்துக் கொடுத்தோம்; மீனவர்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவில்லை; மீத்தேன் ஈத்தேன் என நிலத்தை நஞ்சாக்கினோம்; முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் தர மறுத்தோம் அதனால் நம்மை தோற்கடித்து விட்டார்கள் என உணர வேண்டும்.

தமிழக மக்களிடம் ஓட்டை வாங்க வேண்டும் என்றால் அவர்களுடைய உரிமைக்காக பேச வேண்டும். உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிலையை நீங்கள் உருவாக்காத வரை நம்முடைய உரிமையை மீட்க முடியாது. கல்வி மாநில உரிமை அதை எடுத்துட்டு போனது காங்கிரஸ். அப்போது ஆட்சியில் இருந்தது திமுக. இந்த இரண்டு கட்சிகளும் மீண்டும் சேர்ந்து கொண்டு நம்மிடம் ஓட்டு கேட்டு வருகிறது. ஆனால் இதை நாங்கள் நினைவுபடுத்திக் கொண்டே இருப்போம். மறப்பது மக்களின் இயல்பு அதை நினைவு படுத்திக் கொண்டே இருப்பது போராளிகளின் கடமை. மறந்துடாத, விடாதே, அவர்களுக்கு ஓட்டு போடாதே எனச் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியதாக இருக்கிறது.

மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் எனச் சொல்லுகிறது காங்கிரஸ். அணைக் கட்டியே தீர வேண்டும் எனச் சொல்கிறது பாஜக. இதற்கு இங்கே இருக்கின்ற பாஜக தலைவர்கள், வேட்பாளர்களின் கருத்து என்ன? பேச மாட்டார்கள். காரணம் காவிரியில் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் எனப் பாஜக சொன்னால் அங்கு காங்கிரஸ் ஜெயிக்கும். காங்கிரஸ் சொன்னால் கர்நாடகாவில் பாஜக ஜெயிக்கும். அற்ப தேர்தல் வெற்றிக்காக, பதவிக்காக மக்களின் உரிமையை பலிகொடுக்க தயாரானவர்கள் இவர்கள். என் உரிமைக்கு, உணர்வுக்கு, உயிருக்கு நிற்காத உனக்கு என் ஓட்டு எதுக்கு என்று கேள்வியை எழுப்ப வேண்டும். நம்முடைய வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாத இவர்களுக்கு எதற்கு நமது வாக்கு என்ற சிந்தனை மக்களுக்கு வரவேண்டும்'' என்றார். 

Next Story

“நதிநீர் பிரச்சனையில் காங்கிரஸ் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்கும்” - செல்வப்பெருந்தகை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Congress will support TN govt in river water problem says Selvaperunthagai

தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் உப்பு சத்தியாகிரக நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது. பின்னர் நிர்வாகிகளுக்கு சான்றிதழ்களை சர்தார் வேதாரத்தினம் பிள்ளையின் பேரன், வேதரத்தினப் பிள்ளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜங்ஷன் பூக்கடை பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஆறுமுகம், தண்டியாத்திரை குழு தலைவர் சக்தி செல்வ கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு தலைவர்கள்  சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் எல்.ரெக்ஸ், திருச்சி கலை, மாநிலத் துணைத் தலைவர் சுப.சோமு, மாநில பொதுச் செயலாளர்கள், வக்கீல்கள் சரவணன், இளங்கோ, தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில தலைவர் ஆறுமுகம், மாநில பொதுச் செயலாளர் ஜங்ஷன் பூக்கடை பன்னீர்செல்வம் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “இந்தியாவில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு, பெண்களுக்கு, சிறுபான்மை மக்களுக்கு சரியான பாதுகாப்பு இந்த பாஜக ஆட்சியில் இல்லை.  இதுதான் பத்தாண்டு காலம் பாஜகவின் லட்சனமாகும். உப்பு சத்தியாகிரகத்தைப் பற்றி பிரதமர் மோடி, அண்ணாமலை தெரிந்து கொள்ள வேண்டும். இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களைப் பற்றி மோடியும், தமிழக பாஜக தலைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாஜக வெறுப்பு அரசியலை தமிழகத்தில் புகுத்தப் பார்க்கிறது. இதனை ஒரு நாளும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஜாதி, மத அரசியலை இந்திய மக்கள் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ் இன துரோகி தமிழக பாஜக தலைவர்தான். கர்நாடக எம்.பி தமிழர்களை பற்றி பேசும் பொழுது அதற்கு அவர் பதில் ஏதும் சொல்லாமல் இருப்பது ஏன்? தமிழகத்தின் உரிமை எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறதோ  அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி நிச்சயம் குரல் எழுப்பும், காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக அரசுக்கு, காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். ஒரு நாளும் உரிமையை விட்டுக் கொடுக்காது. இந்தப் பாராளுமன்றத் தேர்தல் மூலம் இந்தியாவிலிருந்து பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும்”என்றார்.