கர்நாடகாவின் காவிரி ஆணைய பிரதிநிதிகள் அந்த மாநிலமுதல்வர் குமாரசாமியால் நியமிக்கப்பட்டனர்.காவிரி ஆணையத்தின் கர்நாடக மாநில உறுப்பினராக அம்மாநிலநீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங் நியமிக்கப்பட்டார்.
காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் கர்நாடகாமாநில உறுப்பினராக பிரசன்னா நியமிக்கப்பட்டார்.காவிரி ஆணயத்திற்கும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவுக்கும் உறுப்பினர்களை நியமிக்ககர்நாடக அரசுதாமதித்தது. கர்நாடகாவின் கருத்துகள் மதிக்கப்படவில்லை என்று அதற்கு காரணம்கூறியது.
காவிரி ஆற்றுப்படுகையில் இருக்கும் பிற மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி மூன்றும் முன்னரே தங்கள் பிரதிநிதிகளை நியமித்தது குறிப்பிடத்தக்கது.