Published on 25/06/2018 | Edited on 26/06/2018

கர்நாடகாவின் காவிரி ஆணைய பிரதிநிதிகள் அந்த மாநில முதல்வர் குமாரசாமியால் நியமிக்கப்பட்டனர். காவிரி ஆணையத்தின் கர்நாடக மாநில உறுப்பினராக அம்மாநில நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங் நியமிக்கப்பட்டார்.
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கர்நாடகா மாநில உறுப்பினராக பிரசன்னா நியமிக்கப்பட்டார். காவிரி ஆணயத்திற்கும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கும் உறுப்பினர்களை நியமிக்க கர்நாடக அரசு தாமதித்தது. கர்நாடகாவின் கருத்துகள் மதிக்கப்படவில்லை என்று அதற்கு காரணம் கூறியது.
காவிரி ஆற்றுப்படுகையில் இருக்கும் பிற மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி மூன்றும் முன்னரே தங்கள் பிரதிநிதிகளை நியமித்தது குறிப்பிடத்தக்கது.