2 கோடி நாட்டு மாடுகள் அழிந்துவிட்டது... கால்நடை கணக்கெடுப்பில் தகவல்...

நாடு முழுவதும் எடுக்கப்பட்டுள்ள கால்நடைகள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பில், பல்வேறு மாநிலங்களில் நாட்டு மாடு இனங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது.

cattle sensus

கால்நடை கணக்கெடுப்பின்படி, கடந்த 2012-ம் ஆண்டில் 19கோடியாக இருந்த மாடுகளின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டில் 19.24 கோடியாக அதிகரித்துள்ளது என தெரிய வந்துள்ளது. ஆனால் அதேநேரம், 2012-ம் ஆண்டில் 3.9 கோடியாக இருந்த கலப்பின மாடுகளின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டில் 5.04 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை, 2012ல் 16 கோடியாக இருந்தது, தற்போது 13.98 கோடியாக குறைந்துள்ளது என தெரியவந்துள்ளது.

cattle cows
இதையும் படியுங்கள்
Subscribe