/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/policeman-std.jpg)
நாடாளுமன்றத்தின் மக்களவையில் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது. மத்திய பணியாளர்கள் துறை இணை மந்திரி ஜிதேந்திரா சிங் இது குறித்து அளித்துள்ள பதிலில், கடந்த 2016, 2017 மற்றும் 2018 ஆகிய 3 ஆண்டுகளில் 4,123 அரசு ஊழியர்கள் மீது 1,767 ஊழல் வழக்குகளை சி.பி.ஐ பதிவு செய்துள்ளது. இந்த 1,767 வழக்குகளில் 900 வழக்குகள் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 59 வழக்குகளில் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்ட்டுள்ளதாகவும், 89 வழக்குகள் மூடப்பட்டு விட்டன என்றும் அவர் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)