கரோனா மற்றும் ஒமிக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால், கேரளா, கர்நாடகா, டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக நாளை முதல் உச்ச நீதிமன்றத்தில் காணொலி மூலமாகவே வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு காணொலி வாயிலாகவே வழக்குகள் விசாரிக்கப்படும் என உச்சநீதி மன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 7ஆம் தேதி வரை நேரடி விசாரணையில் வழக்குகள்நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.