Advertisment

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி 

case has been registered against a BJP leader who misbehaved with a girl

உத்தரகாண்ட் மாநிலம் சாம்ப்வட் மாவட்டத்தை சேர்ந்த கமல் ராவத். இவர் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், கமல் ராவத் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், பாஜக நிர்வாகி கமல் ராவத் மீது காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசா,ர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பாஜக நிர்வாகி கமல் ராவத் வீட்டில் இருந்து தப்பித்து தலைமறைவாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து கமல் ராவத்தை தேடும் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisment

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் நிர்வாகி ஒருவரே பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police uttarkhand
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe