/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_578.jpg)
பாஜக எம்.எல்.ஏ சுனில் காம்ப்ளே பணியில் இருந்த காவலரின் கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் சசூன்ஸ் மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தனி வார்டு திறக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர் சரத்பவார் வார்ட்டை திறந்து வைத்தார். இந்த விழா மேடையில் பாஜக எம்.எல்.ஏ சுனில் காம்ப்ளேவின் பெயர் இடம்பெறாததால் கோபமடைந்த அவர், மேடையில் இருந்து வேகமாக கீழே இறங்கினார்.
அப்போது, மேடையின் படிக்கட்டில் தடுக்கி விழுந்தார். இதனால் ஆத்திரமடைந்த சுனில் காம்ப்ளே அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரை கன்னத்தில் வேகமாக அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சுனில் காம்ப்ளே உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், பலரும் சுனில் காம்ப்ளேவுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)