உத்தரப் பிரதேசத்தில் சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் மாயமான விவகாரத்தில் பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்தா மீது உத்தரப் பிரதேச போலீஸார் கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக சிறை வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் உள்ள எஸ்.எஸ். சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர் கடந்த சனிக்கிழமை தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் தனது கல்லூரி நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் சிலர் தன்னிடம் அத்துமீறியதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மேலும் அதில், "சன்த் சமாஜத்தின் ஒரு பெரிய தலைவர், பல்வேறு பெண்களின் வாழ்வை சீரழித்தவர். தற்போது என்னையும் கொலை செய்ய முயற்சிக்கிறார். அவர் எனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார். தயவு செய்து உதவி செய்யுங்கள். அவர் தனது கையில் போலீஸ், உயரதிகாரிகளை வைத்துள்ளார். முதல்வர் யோகி அவர்களையும், பிரதமர் மோடி அவர்களையும் உதவிக்கு அழைக்கிறேன்" எனக் கூறியிருந்தார்.
இந்த வீடியோ வெளியாவதற்கு உடுத்தினால் அந்த மாணவி காணாமல் போனார். இந்த நிலையில் அந்த பெண் வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அந்தப் பெண்ணின் தந்தை, சுவாமி சின்மயானந்தா பெயரைக் குறிப்பிட்டு தனது மகள் காணாமல் போன புகாரை பதிவு செய்துள்ளார். சின்மயானந்தா அதிகார பலமிக்கவர். அவரே எனது மகளின் கடத்தலுக்கு பின் இருக்கிறார் என அதில் கூறியுள்ளார்.
இதனையடுத்து சுவாமி சின்மயானந்தா மீது உத்தரப் பிரதேச போலீஸார் கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக சிறை வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே சுவாமி சின்மயானந்தா, தனது ஆசிரமத்தில் இருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.