Skip to main content

கோவிலுக்குள் சினிமா பாடலுக்கு நடனமாடிய பெண் மீது வழக்குப்பதிவு!

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

yி

 

கோயிலுக்கு உள்ளே நடனமாடிய பெண் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள மகாகாளிஸ்வர் கோவிலுக்கு மனீஷா ரோஷன் என்ற இளம் பெண் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தார். கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகளுடன் சாமி தரிசனம் செய்த அவருக்கு திடீரென ஒரு எண்ணம் தோன்றியது. கோவிலுக்கு முன்பு வீடியோ எடுத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்த அவர் உடன் வந்த நண்பர்களின் உதவியுடன் கோயிலுக்கு உள்ளே வாசற்படியில் நின்று வீடியோ எடுத்துள்ளார்.

 

வீடியோ எடுத்த அவர் அன்று மாலை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார். வீடியோ உடனடியாக அவரின் மற்ற நண்பர்களால் பகிரப்பட்டதால் சில மணி நேரங்களில் அந்த வீடியோ வைரலானது. சிலர் டான்ஸ் சூப்பர் என்று கமெண்ட் செய்த நிலையில், சிலர் கோவிலுக்கு முன்பு ஆபாச நடனமா? என்று கேள்வி எழுப்பியிருந்தனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்படவே, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story

கார் ஓட்டுநரை தாக்கிய லாரி ஓட்டுநர்; கதறி அழுத மனைவி

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

Lorry driver hits car driver; A crying wife

 

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள ரேடியல் சாலையில் கார் ஒன்றின் மீது லாரி மோதிய சம்பவத்தில் கார் ஓட்டுநருக்கும் லாரி ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், லாரி ஓட்டுநர் கார் ஓட்டுநரை அவருடைய மனைவி முன்பே தாக்கிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ரேடியல் சாலையில் லாரி மோதியதில் கார் சேதமடைந்தது. இதனால் கார் ஓட்டுநர் லாரி ஓட்டுநரிடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்பொழுது லாரி ஓட்டுநர் அலட்சியமாக பதில் சொன்னதாலும், ஆபாசமாக பேசியதாலும் லாரியின் சாவியை கார் ஓட்டுநர் எடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காரில் வந்த நபரின் மனைவி முன்பே லாரி ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் வந்த நபரின் மனைவி கதறி அழுது கூச்சலிட்ட நிலையிலும் அவர் மீது தாக்குதல் தொடர்ந்தது. இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பல்லாவரம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.