Skip to main content

முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம்... சிகிச்சை அளித்த மருத்துவர் மீது வழக்குபதிவு!

Published on 17/09/2019 | Edited on 17/09/2019


தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தனது குடும்பத்தினருடன் ஹைதரபாத்தின் பேகம்பட்டில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார். இங்கு சந்திரசேகர் ராவ் 10 நாய்கள் வளர்ந்து வருகிறார். இதில் 11 மாத நாய் ஹாஸ்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் போனது. சைவ உணவை மட்டுமே சாப்பிடும் அந்த நாயால், பால் கூட குடிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. அத்துடன் மூச்சு விடுவதற்கும் சிரமப்பட்டு உள்ளது. இதையடுத்து முதல்வரின் இல்லத்தில் இருந்து நாயை தூக்கிக்கொண்டு பஞ்சரா ஹில்ஸில் உள்ள தனியார் விலங்குகள் நல மருத்துவமனைக்கு புதன்கிழமை கொண்டு சென்று இருக்கிறார்கள். அங்கிருந்த கால் நடை மருத்துவர்கள் லட்சுமி மற்றும் ரஞ்சித் ஆகியோர், ஊசி போட்டு சிகிச்சை அளித்தார்கள். ஆனால் நாய் ஹாஸ்கி சிகிச்சை பலன் இன்றி இறந்த போனது.

 

dh



இந்நிலையில் முதல்வர் இல்லத்தில் நாய்களை பராமரித்து வந்த அஸிப் அலிகான் அளித்த புகாரை ஏற்று போலீசார் கால் நடை மருத்துவர்கள் லட்சுமி மற்றும் ரஞ்சித் ஆகியோர், மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். நாய்களை பராமரித்து வந்த அஸிப் அலிகான், மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்காததால், நாய் இறந்து விட்டதாக புகார் அளித்து உள்ளார். இந்த விவகாரம் தெலுங்கானா மாநில மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் நடவடிக்கை கொடூரமான செயல் என கடுமையாக விமர்சித்துள்ளன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பன்றிகளை வேட்டையாட வைக்கப்பட்ட அவுட்டுக்காய்; நாய் தலை சிதறியது!

Published on 01/07/2021 | Edited on 01/07/2021
Outcrop kept for hunting pigs; The dog's head was scattered

 

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் இன்று காலை வழக்கமான ரோந்து பணியில் இருந்தனர். அப்போது பூச்சியூர் அருகிலுள்ள கதிர் நாயக்கன்பாளையம் ரங்கசாமி என்பவரது பட்டா நிலத்தில் வெடிச்சத்தம் கேட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் அவுட்டுக்காய் வெடித்து தலை சிதறி கிடந்த நாயை கண்டனர்.

 

தொடர்ந்து அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சென்ற இரண்டு பேரை பிடித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் காட்டு பன்றிகளை வேட்டையாட அவுட்டுக்காய் வைத்தது தெரியவந்தது. பின்னர் அவர்களிடமிருந்து ஐந்து அவுட்டுக்காய்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சட்டவிரோதமாக வெடி வைத்த வழக்கில்  கைது செய்யப்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் முருகேசன் மீது துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து  தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Next Story

போலீஸ் ஸ்டேஷனுக்கு போகாம எங்களை பாதுகாத்தவன்... இறந்த நாய்க்காக கதறும் மக்கள்!

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

தெருமக்கள் பாசமாக வளர்த்து வந்த நாயை சுட்டுக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாயை  கொன்ற கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடியதும் விசாரணையில் இறங்கிய காவல்துறை 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. தங்களை பாதுகாத்த நாய்க்கு பிரியாவிடை கொடுத்த மக்களின் அழுகுரலுடன் நாயின் சடலம் எடுத்து செல்லப்பட்டது. இந்த சம்பவம் கரூர் பகுதியில் பெரிய பாச போராட்டத்தையே ஏற்படுத்தியுள்ளது.
 

கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் உள்ள கணக்குப்பிள்ளை தெருவில், ரமேஷ் என்கின்ற ஒரு நாயை, அதே பகுதியில் சின்னத்தம்பி என்பவர் வளர்த்து வரும் நிலையில், அந்த தெருவில் அனைவரது வீட்டில் நன்கு பழகிய நிலையில், அனைவருக்கும் அந்த நாய் பழக்கமாகியுள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் திருடர்களை அண்டவிடமால், வந்த வழியே துரத்தும், இந்த நல்லகுணம் குண்ட நாயை அதிகம் நேசிப்பவர்கள் தான் அதிகம், இந்நிலையில், அதே பகுதியை சார்ந்த, ஒருவர் கரூர் நகராட்சியிடம் புகார் அளித்தும், அது அடிக்கடி குழைப்பதாக கூறிய நிலையில் இன்று அந்த நாயினை நகராட்சி ஊழியர்கள் வேட்டை துப்பாக்கியை கொண்டு சுட்டுக் கொன்றுள்ளனர்.
 

ஆசை, ஆசையாய் வளர்த்த நாயினை சுட்டுக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பாசமாய் பழகிய நாயை கொல்ல தூண்டியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறி அந்த பகுதி மக்கள் திடீரென்று குப்பை லாரிகளை மறித்தும், சாலை மறியலிலும்  ஈடுபட்டனர். மேலும், இந்த சம்பவத்தினால் அந்த பகுதி வழியாக செல்லும் பள்ளி கல்லூரி வாகன பேருந்துகள் வரிசை கட்டி நின்றன.

karur district dog died people crying police arrested in municipality employees


பின்பு காவல்துறையினரும், அ.தி.மு.க நிர்வாகிகளும் வந்து மக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின்பு நாயின் சடலம் எடுக்கப்பட்டு, பின்னர் கலைந்து சென்றனர். இந்த காலத்தில் மனிதனை தாக்கி விட்டு சென்றாலே, கண்டு கொள்ளாத உலகில், நாய் மீது கொண்ட பாசத்தினால், நாயை சுட்டுக்கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூடிய சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் நடத்திய சாலை மறியல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
 

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், இந்த நாய் இருக்கிற வரைக்கும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. திருட்டு பயமும் இல்லாமல் இருந்தது. இது வரை நாங்கள் திருட்டு பிரச்சனைக்காகவும், எங்கள் பாதுகாப்புக்காவும் நாங்க போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதித்தது இல்லை. ஆனால் முதல்முறையாக அவனோட இறப்புக்கு நியாயம் கேட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிருக்கோம் என்றார்கள்.
 

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் நகராட்சி ஊழியர் வேலுச்சாமி மற்றும் ரமேஷ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ரமேஷ் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்