லண்டனில் நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சைபர் கிரைம் நிபுணரான சையத் சுஜா என்பவர் 2014 க்கு பின் இந்தியாவில் நடந்த பெரும்பான்மை தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றுள்ளது என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் எனவும் கூறினார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான ஹேஷ்டேக் -களும் சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. இதனை தொடர்ந்து, நேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், டெல்லி காவல் துறையிடம் புகார் ஒன்றை அளித்துள்ளது. அதன்படி லண்டனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தவறான தகவலை பரப்பியதாக சையத் சுஜா மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.