Advertisment

சுப்ரமணியம் ஸ்வாமி மீது கிரிமினல் வழக்கு பதிவு...

பாஜக வின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி யுமான சுப்ரமணியம் ஸ்வாமி மீது சத்தீஸ்கர், தெலுங்கானா போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisment

case filed against subramaniam swamy

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போதைப்பொருள் எடுத்துக்கொள்வார் என சுப்ரமணியம் ஸ்வாமி தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதனை எதிர்த்து சத்தீஸ்கர்மாநிலம் ஜஷ்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பவன் அகர்வால் கொடுத்த புகாரின் பேரில் பத்தல்கோன்காவல்நிலையத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இதுகுறித்து பேசியுள்ள பவன் அகர்வால், "சுப்ரமணியம் ஸ்வாமி வேண்டுமென்றே ராகுல் காந்தியை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். இது ஒரு மோசமான, பொறுத்துக்கொள்ளமுடியாத கருத்து" என கூறியுள்ளார். சுப்பிரமணியன் ஸ்வாமி மீது 504, 505(2), 511 ஆகிய பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே விவகாரம் தொடர்பாக தெலுங்கானாவிலும் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

congress Subramanian Swamy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe