மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேசத் துரோக சட்டம் (124-ஏ) நீக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்ததற்கு எதிராக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நரேந்திர ஷர்மா என்பவர் தொடுத்துள்ள இந்த வழக்கில் வரும் ஏப்ரல் 16 அன்று விசாரணை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.