அரசியல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் மீது பீகார் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
பிரசாந்த் கிஷோர் தனது 'பாத் பீகார் கி' பிரச்சாரத்திற்காக அனுமதியின்றி தனது படைப்புகளை பயன்படுத்தியதாக ஷாஷ்வத் கெளதம் என்ற இளைஞர் காவல்துறையில் புகாரளித்தார். இது தொடர்பாக தற்போது பிரசாந்த் கிஷோர் மீது மோசடி மற்றும் குற்றவியல் நம்பிக்கையை மீறியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒசாமா என்ற மற்றொரு நபருக்காக தான் உருவாக்கிய உள்ளடக்கத்தை பிரசாந்த் கிஷோர் பயன்படுத்தியதாக ஷாஷ்வத் தெரிவித்துள்ளார். இந்த புகாரை அடுத்து பிரசாந்த் கிஷோருக்கு எதிராக 420 (ஏமாற்றுதல்) மற்றும் 406 (குற்றவியல் நம்பிக்கையை மீறியது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.