Skip to main content

தனது சொந்த திருமணத்திற்கே வராத எம்.எல்.ஏ... போலீஸில் புகாரளித்த மணப்பெண்!

Published on 19/06/2022 | Edited on 19/06/2022

 

case filed against odisha mla for missing his own wedding

 

தனது சொந்த திருமணத்தின் பதிவிற்கு பதிவாளர் அலுவலகம் வராததால், ஒடிசா எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில போலீஸார் தெரிவித்துள்ளனர்.

 

பிஜு ஜனதாதளத்தைச் சேர்ந்த பிஜாய் சங்கர் என்பவர் திர்டோல் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ -வாக உள்ளார். 30 வயதான பிஜாய் சங்கர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் பதிவுத் திருமணம் செய்ய முடிவெடுத்து, கடந்த மே 17 அன்று பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர். இதனையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை இவர்கள் இருவரின் திருமணப் பதிவும் ஜகத்சிங்பூர் சதார் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்துள்ளது. இதற்காக மணப்பெண் காலையிலிருந்து அலுவலகம் வந்து காத்திருந்த நிலையில், மணமகனாக பிஜாய் சங்கர் அங்கு வரவில்லை. நீண்ட நேரம் காத்திருந்து அவர் அலுவலகம் வராததால் பொறுமை இழந்த மணப்பெண், பிஜாய் சங்கர் தன்னை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவிட்டதாக ஜகத்சிங்பூர் சதார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

 

இந்த புகாரின் அடிப்படையில் ஜகத்சிங்பூர் சதார் காவல் நிலையத்தில் திர்டோல் சட்டமன்ற உறுப்பினர் பிஜாய் சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏமாற்றுதல், பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

இவ்விவகாரம் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள பிஜாய் சங்கர், "நான் திருமணம் செய்யாமல் ஏமாற்றவில்லை. திருமணப் பதிவுக்கு இன்னும் 60 நாட்கள் அவகாசம் உள்ளது. எனவேதான் வெள்ளிக்கிழமை நான் வரவில்லை. திருமணப் பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்லுமாறு மணப்பெண்ணோ அவரது குடும்பமோ என்னிடம் சொல்லவில்லை" என்று தெரிவித்துள்ளார். 

 

இந்த விவகாரம் குறித்து பேசிய புகாரளித்த பெண், "நானும் பிஜாய் சங்கரும் மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வருகிறோம். திட்டமிட்ட தேதியில் என்னைத் திருமணம் செய்து கொள்வதாக அவர் உறுதியளித்திருந்தார். ஆனால், இப்போது அவரது சகோதரரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் என்னை மிரட்டுகிறார்கள். அவர் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை, எனது தொலைபேசி அழைப்புகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை," என்று குற்றம் சாட்டியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை திறப்பு!

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Puri Jagannath temple treasure room opening

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை மற்றும் தொலைந்து போனதாகச் சொல்லப்படும் அதன் சாவி குறித்த விவகாரங்களை பாஜக கையில் எடுத்திருந்தது. இது தொடர்பாக ஒடிசாவில் முன்பு ஆட்சி செய்த பிஜு ஜனதா தள கட்சிக்கு எதிராக பாஜக தீவிரமாகப் பரப்புரை செய்தது. இந்த சட்டமன்ற தேர்தலில் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும் கடந்த 1978 ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது வரை பொக்கிஷ அறை திறக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் 46 ஆண்டுகளுக்குப் பின் இன்று (14.07.2024) பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையை மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து பூரி மாவட்ட ஆட்சியர் உள்பட 11 பேர் கொண்ட குழுவினர் பொக்கிஷ அறைக்குச் சென்று ஆய்வு செய்தனர். அதே சமயம் பொக்கிஷ அறையில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி நாளை (15.07.2024) தொடங்க உள்ளது. முன்னதாக பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கீடு செய்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் ராத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

முன்னாள் காதலனை மறக்க முடியாது; புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
woman who incident her husband along with her ex-boyfriend

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளிக்கு அருகே அமைந்துள்ளது பாலேகுளி ஊராட்சி. இங்குள்ள கூரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமாா். 25 வயதான இவர் ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். ராம்குமாருக்கு திருமண வயது நெருங்கிய நிலையில் அவருக்கு வரன் பார்க்கப்பட்டு வந்தது. அதன்படி, ராம்குமாருக்கும் சூளகிரியை அடுத்த ஜோகிா்பாளையத்தைச் சோ்ந்த சுஜாதா என்ற 19 வயது பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 

இந்தத் தம்பதி தங்களுடைய திருமண வாழ்க்கையைப் பிரகாசமாக தொடங்கிய சமயத்தில் இவர்களுக்குள் பல்வேறு முட்டல் மோதல்கள் நீடித்து வந்தது. இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படவே குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போனது. இந்தச் சமயத்தில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் உறவினர்களும் ராம்குமார்  - சுஜாதா தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்னையைத் தீர்த்து வைக்க முயற்சித்தனர். ஆனால், நாளுக்கு நாள் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அதிகரித்துக்கொண்டே போனது.

இத்தகைய சூழலில், கடந்த 28ஆம் தேதி வீட்டில் இருந்த ராம்குமார் கழுத்தில் மின்சார ஒயர் இறுக்கிய நிலையில் உடலில் காயங்களுடன் மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் உயிரிழந்த ராம்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராம்குமாரை கொலை செய்தது யார்? அதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஒருகட்டத்தில், போலீசாரின் சந்தேகம் மனைவி சுஜாதா மீது திரும்பியது. ராம்குமார் வீட்டில் ஆய்வு நடத்தும்போது சுஜாதா காட்டிய கள்ள மௌனமும் பதற்றமும், அவரை விசாரணை வளையத்தில் கொண்டுவர வைத்தது. 

இதனிடையே, சுஜாதாவை காவல் நிலையம் அழைத்துச் சென்று மேற்கொண்ட விசாரணையில்.. பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், சுஜாதாவுக்கு திருமணம் நடப்பதற்கு முன்பு.. சூளகிரி அருகே உள்ள பீலாளம் கிராமத்தைச் சோ்ந்த கணேசன் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். ஆனால், இந்தக் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி ராம்குமாரை திருமணம் செய்துகொண்டார். காதலனை மறக்க முடியாத சுஜாதா திருமணத்திற்கு பிறகும் கணேசனுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். வீட்டில் ஆள் இல்லாத சமயத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். ஒருகட்டத்தில், இந்த விவகாரம் கணவர் ராம்குமாருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராம்குமார் திருமணத்தை மீறிய உறவை கைவிடும்படி கூறி மனைவியைக் கண்டித்துள்ளார். கணவரின் கண்டிப்பும் கட்டுப்பாடும் சுஜாதாவுக்கு எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. 

நாளுக்கு நாள் இவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை அதிகமாகவே தனது உறவுக்கு இடைஞ்சலாக இருக்கும் கணவரை கொலை செய்ய முடிவெடுத்தார். சுஜாதா போட்ட திட்டப்படி வீட்டில் தனியாக இருந்த ராம்குமாரை தனது காதலன் கணேசன் மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகியோருடன் சோ்ந்து அடித்தே கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. 

இது தொடர்பாக, சுஜாதா, கணேசன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த கணேசனின் நண்பர் மோகன் ஆகியோரை கைது செய்து சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணைக்கு பிறகு மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.