இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு...

rts

பொருளாதார ரீதியாக நலிவுற்ற அனைத்து பிரிவினருக்குமான 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில் இட ஒதுக்கீட்டுக்கு பொருளாதாரத்தை மட்டுமே அளவீடாக கொள்ள முடியாது என்ற அடிப்படையில் அந்த மசோதாவை ரத்து செய்யக் கோரி மனு செய்துள்ளனர். பொருளாதார அடிப்படை என்பது பொதுப்பிரிவினருக்கு மட்டுமானதாக இருக்க முடியாது. ஏற்கனவே உள்ள 50% இடஒதுக்கீட்டு வரம்பு என்பது மீற முடியாததாகும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மசோதாவானது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

quota bill supremecourt
இதையும் படியுங்கள்
Subscribe