Advertisment

அரசியல் சாசனத்தை மீறும் வேளாண் சட்டங்கள்? - வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

farmers

மத்திய அரசின்வேளாண்சட்டங்களுக்கு எதிராக,விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும் எனவேளாண்சட்டங்கள் தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

Advertisment

இதனிடையே, வேளாண்சட்டங்களுக்கு எதிராகவழக்கறிஞர் மனோகர்லால்சர்மாதொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் மனோகர்லால்சர்மா, புதிய வேளாண்சட்டங்கள் இந்தியஅரசியல் சாசனத்தைமீறும் வகையில் உள்ளதாககுறிப்பிட்டார்.

Advertisment

தொடர்ந்து நடந்த விசாரணையில், விவசாயிகள் போராட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறியநீதிபதிகள், இந்த வழக்கையும், வேளாண் சட்டங்களுக்கு எதிரானமற்ற வழக்குகளையும் சேர்த்துவிசாரிப்பதாக கூறினார். ஆனால் மத்திய அரசு, விவசாயிகளோடு ஆரோக்கியமானவிவாதம் நடைபெற்று வருகிறது. எனவே இந்த வழக்கை, வரும் வெள்ளிக்கிழமை வரை மற்ற வேளாண்சட்டங்கள் தொடர்பான வழக்குகளோடு விசாரிக்க வேண்டாம் எனகேட்டுக்கொண்டது.

இதனைஏற்றுக்கொண்ட நீதிபதிகள், எங்கள் நோக்கம் பேச்சுவார்த்தையைஊக்குவிப்பதே என்று கூறி, வரும் 11 ஆம் தேதிக்குஇந்த வழக்கைஒத்திவைத்தனர்.

farm bill Supreme Court (1665 farmer protest.
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe