Skip to main content

அரசியல் சாசனத்தை மீறும் வேளாண் சட்டங்கள்? - வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

farmers

 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும் என வேளாண் சட்டங்கள் தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

 

இதனிடையே, வேளாண் சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா, புதிய வேளாண் சட்டங்கள் இந்திய அரசியல் சாசனத்தை மீறும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டார்.

 

தொடர்ந்து நடந்த விசாரணையில், விவசாயிகள் போராட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கையும், வேளாண் சட்டங்களுக்கு எதிரான மற்ற வழக்குகளையும் சேர்த்து விசாரிப்பதாக கூறினார். ஆனால் மத்திய அரசு, விவசாயிகளோடு ஆரோக்கியமான விவாதம் நடைபெற்று வருகிறது. எனவே இந்த வழக்கை, வரும் வெள்ளிக்கிழமை வரை மற்ற வேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்குகளோடு விசாரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டது.

 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், எங்கள் நோக்கம் பேச்சுவார்த்தையை ஊக்குவிப்பதே என்று கூறி, வரும் 11 ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயிகள் போராட்டக் களத்தில்  நிறுத்தப்பட்டுள்ள அதிபயங்கர ஆயுதம்! 

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Sonic sound produce machine in delhi farmers

ஒன்றிய அரசு 2020 ஆம் ஆண்டு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விவசாயிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக இந்திய தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் ஒன்றிய அரசு விவசாயி சங்கங்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால், விவசாயிகள் சட்டத்தை வாபஸ் பெற்றால் மட்டுமே போராட்டம் ஓயும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். அதேபோல், மூன்று வேளாண் சட்டத்திற்கும் எதிராக விவசாயிகள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், விவசாயிகளின் போராட்டத்தை ஒன்றிய அரசு கையாண்ட விதத்தை கடுமையாக சாடியது. மேலும், மூன்று வேளாண் சட்டங்களுக்கும் உச்சநீதிமன்றம் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது. 

தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க 2021ம் ஆண்டு குடியரசுத் தினத்தன்று, விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில், விவசாயிகள் செங்ககோட்டையினுள் நுழைந்தனர். மேலும், சிலர் செங்கோட்டையின் மீது விவசாயிகள் சங்கக் கொடியையும் ஏற்றினர். இதில், விவசாயிகளுக்கும் போலீசாருக்குமிடையே மோதல் நடந்து. இதில், உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

Sonic sound produce machine in delhi farmers

இந்தப் போராட்டத்திற்கு எதிர்வினையாக 2021ம் ஆண்டு அக். மாதம் 3ம் தேதி லக்கிம்பூரில் விவசாயிகள் மீது மத்திய இணையமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதிய சம்பவமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நெரிசலால் எட்டு பேர் உயிரிழந்ததும் இன்றும் மக்கள் மனதில் இருந்து வடியாத வடுவாகவே உள்ளது.  இது தவிர டெல்லியில் கடும் குளிரில் போராடிய விவசாயிகள் பலர் உயிரிழந்தனர். 

இப்படி பல்வேறு போராட்டமும், உயிரிழப்புகளையும் கடந்து 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகப் பிரதமர் மோடி அறிவித்தார். இந்தியா மட்டுமின்றி விவசாயிகளின் இந்தப் போராட்டம் உலகம் முழுக்க கவனம் பெற்றது. 

Sonic sound produce machine in delhi farmers

மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது மட்டுமின்றி, குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம், போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளையும் விவசாயிகள் வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி மத்திய அரசு, விவசாயிகளுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதத்தில், குறைந்தபட்ச ஆதார விலை குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்படும், அந்த குழுவில் விவசாயிகளும் இடம்பெறுவார்கள், விவசாயிகள் மீதான வழக்குகள் உடனடியாக திரும்பப் பெறப்படும், பயிர் கழிவுகளை எரித்ததற்கான வழக்குகளும் திரும்பப் பெறப்படும் எனவும் அந்தக் கடிதத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனையேற்ற விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். 

Sonic sound produce machine in delhi farmers

ஆனால், தற்போதுவரை ஒன்றி பா.ஜ.க. அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் மீண்டும் போராட்டம் தொடரும் என விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் விவசாயிகள் சங்கங்கள் சார்பாக போராட்டம் துவங்கியது. இந்தப் போராட்டத்திற்கு விவசாயிகள் வருவதை தடுப்பதற்கு ராணுவமும் போலீஸும் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்தன. குறிப்பாக விவசாயிகள் வரும் சாலைகளில் ஆணிகள் பதிப்பது, வழியில் முள்வேலிகளை அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுப்பட்டன. இதனை எல்லாம் தாண்டி விவசாயிகள் போராட்டக் களத்தை நோக்கி நகர்ந்தபோது  போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டது. கலைந்து செல்லாமல் இருந்த விவசாயிகள் மீது தடியடியும் நடத்தப்பட்டுள்ளது. 

இப்படி தொடர்ந்து விவசாயிகளை அடக்கும் வேலைகள் நடந்துகொண்டிருக்க, அதனை பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். இந்நிலையில் போராடும் விவசாயிகளை முடக்க அதிபயங்கரமான ஆயுதம் ஒன்று போராட்டக் களத்திற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது. 

Sonic sound produce machine in delhi farmers

அதிப் பயங்கர ஒலி எழுப்பக்கூடிய சோனிக் ஆயுதம் எனப்படும் எல்.ஆர்.ஏ.டி. போராட்டக் களத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பொதுவாக மனித செவிமடல் தாங்கும் ஒலி அளவைவிட பன்மடங்கு அதிகமாக இதில் இருந்து ஒலி எழுப்பப்படும். அப்படி அதிக ஒலி எழுப்பப்படும்போது, மனித செவி திறன் பாதிக்கப்படும். இந்த ஒலியை தாங்க முடியாமல் போராடும் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து செல்வார்கள் என திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

Next Story

விவசாயிகள் போராட்டம்; இணைய சேவை துண்டிப்பு!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
nternet service outage Farmers protest at haryana

ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கத்தார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அங்குள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இதற்கு எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது 

அதனால், அனைத்துப் பயிர்களுக்கும் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும் உட்படப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். 

விவசாய சங்கத்தினர், மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் முற்றுகைப் போராட்டத்தை வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று மேற்கொள்ள நாளை (11-02-24) முதல் ஹரியானாவில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.

இந்த நிலையில், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் அந்த மாநிலத்தில் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, நாளை (11-02-24) முதல் வரும் 13 ஆம் தேதி வரை ஹரியானாவில் ஏழு மாவட்டங்களுக்கு இணைய வழி சேவையை துண்டிக்க உத்தரவிட்டுள்ளார். அதில், அம்பாலா, குருசேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத், சிர்சா ஆகிய மாவட்டங்களில் இணைய சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போனில் பேசுவதற்கான அழைப்புகளைத் தவிர இதர இணைய சேவைகளுக்கு வரும் 13 ஆம் தேதி காலை 6:00 மணி முதல் 13 ஆம் தேதி இரவு 11:59 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.