ஆக்கிரமிப்பு குடியிருப்புகளைப்புல்டோசர்களைக்கொண்டு இடிக்கும்நடவடிக்கைகளுக்குத்தடை விதிக்கக் கோரி இஸ்லாமிய அமைப்பு தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று (16/06/2022) விசாரிக்க உள்ளது.
நபிகள் நாயகத்தைஇழிவுபடுத்திப்பேசிய விவகாரத்தில்,நுபுர்சர்மாமீது நடவடிக்கை கோரி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. அப்போது,உத்தரப்பிரதேசத்தில்நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது.வன்முறைக்குக்காரணமானவர்கள் எனக் கருதப்படும் நான்கு பேரின் வீடுகள்ஆக்கிரமிப்புஎனக் கூறிபுல்டோசர்களைக்கொண்டு இடிக்கப்பட்டன.
இதுபோன்று இடிப்பதற்குஅரசுக்குதடை விதிக்கக்கோரி,ஜாமியத்உலமா இஹிந்த்என்ற அமைப்பு டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. முன்னதாக, இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதிக்குகடிதம் எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.