
மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு எதிரான மனுவை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.
கடந்த ஆண்டு, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜஸ்ரீ என்ற மாணவி உச்ச நீதிமன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்திருந்தார். ‘11ஆம் வகுப்புவரை தனியார் பள்ளியிலும், 12ஆம் வகுப்பை அரசுப் பள்ளியிலும் படித்த எனக்கு இந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சீட்டு தரவில்லை’ என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை ஏற்றுகொள்ள மறுத்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தை நாட மாணவி ராஜஸ்ரீக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
Follow Us