Skip to main content

தேசதுரோக வழக்குக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை - பிரகாஷ் ஜவடேகர்

Published on 09/10/2019 | Edited on 09/10/2019

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 49 முக்கிய பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர். இந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா, முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல பிரபலங்கள் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி தங்கள் கருத்துக்களை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்தனர். இந்த் நிலையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் டெல்லியில் செய்தியாளர்களை  சந்தித்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் திரைப்படத் தயாரிப்பாளர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள்  மீது, தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சில சிறிய கூட்டங்கள், வேண்டுமென்றே மத்திய அரசு மீது, தவறான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாக கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

அதெல்லாம் இங்கே பொருந்தாது! - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

Published on 26/12/2020 | Edited on 26/12/2020

 

 What he said does not apply here - Minister Jayakumar!

 

நேற்று சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை டெல்லி தலைமை தான் அறிவிக்கும் எனக் கூறியிருந்தார்.

 

 What he said does not apply here - Minister Jayakumar!

 

இந்தக் கருத்துக்கு தமிழக அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தமிழகத்தில் அதிகமாக தேர்தலில் வென்றது அதிமுக தான். அவர் கூறியது நம்முடைய மாநிலத்திற்கு பொருந்தாது. அவர் வேறு எந்த ஸ்டேட்டிற்கோ சொல்கிறார். நம்மைப் பொருத்தவரை தெளிவாக இருக்கிறது. நம் மாநிலத்தில் 10 தேர்தல்களில் ஏழு தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். அந்த ஏழு தேர்தலிலும் பெரும்பான்மையோடு தான் ஜெயித்திருக்கிறோம் என்றார்.

 

 

 

Next Story

காற்று மாசுபாட்டால் பாதிப்பில்லை - பிரகாஷ் ஜவடேகர்!

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

காற்று மாசுபாடு பிரச்சனை நாட்டின் பெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த காட்டுவளம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்த பதில் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.



காற்று மாசுபாடு பிரச்சினை இருக்கிறது உண்மைதான். ஆனால், அது வாழ்நாளைக் குறைக்கும் என்று இந்தியாவில் நடத்தப்பட்ட எந்த ஆய்வும் சொல்லவில்லை. மேலும் மாசுபாட்டை குறைப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமைச்சரின் இந்த பதிலை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் எதிர்கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்களும் அமைச்சரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.